பி.எட். படித்தால் மட்டும் போதாது; ஆசிரியர் வேலைக்குத் தகுதித் தேர்வும் எழுதி வெற்றி பெறவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
பள்ளி ஆசிரியர் வேலைக்கு பிஎட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதி முறை. எனினும் இனி மேல் அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் வேலைக்குச் செல்ல முடியும்.
இது பற்றி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பாவது:
பி.எட். பட்டம் பெற்றவர்கள் டி.இ.டி. எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வில் குறைந்த அளவு 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றவர்கள்தான் ஆசிரியர் வேலைக்குச் செல்ல முடியும்.

தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறாத பள்ளிகள் அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும். இத் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வை மத்திய அரசும், மாநில அரசுகளும் தனித் தனியே நடத்த வேண்டும். இத்தேர்வை நடத்த விரும்பாத மாநிலங் களில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் ஒரு முறை தேர்வில் வெற்றி பெற்றவர்களும் மீண்டும் தேர்வு எழுதி முன்பைவிட அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிக்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானால் தேர்வு எழுதலாம்.
இத்தேர்வில் முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தாள்கள் உள்ளன.
ஒன்றாம் வகுப்பிலிருந்து அய்ந்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிப்பதற்கு முதல் தாள் தேர்வு எழுதவேண்டும். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிபுரிய விரும்புபவர் கள் இரண்டாம்தாள் தேர்வை எழுதவேண்டும்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிபுரிய விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுதவேண்டும்.
இவ்வாறு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment